புரிகிறதா

காயங்கள் வாழ்க்கை அல்ல
-- காரணங்கள் வாழ்க்கை அல்ல
உயரங்கள் வாழ்க்கை அல்ல
-- உணர்வுகள் வாழ்க்கை அல்ல

காயம்!!!
--கண்கள் தேடும் வர்ணம்
----நமை நீங்கிச் செல்ல
--நாம் உருவாக்கும் வடு...

காரணம்!!!
--வடுவுக்கு உருகொடுத்து உருவை
----வடித்து, கருவாக்கி கட்டும்
--கதைகளின் தொகுப்பு சுமை...

உயரம்!!!
--சுமைகளை பதுக்கி பதுக்கி
----மேல்ஏறி நின்று நாம்
--கொள்ளும் உவகை மாயை...

உணர்வு!!!
--மாயை தோற்றத்தில் மதி
----இழந்து, மிதிபட்டும் மாறமுடியா
--மயக்க நிலையின் தொகுப்பு...

இருக்க,
தேடுகிறாயோ வாழ்க்கையை,
நான் கண்டவாழ்க்கை இதோ...

பகிர்வது - ஒன்றில் இரண்டாகட்டும்,
----நுகர்வது - நான்கிரண்டில் ஒன்றாகட்டும்,
தொடர்வது - நால்வரில் நன்மையாகட்டும்,
----பகர்வது - நன்மைதரும் வார்த்தையாகட்டும்,

மகிழ்வது - வார்த்தை சுகமாகட்டும்,
----வேண்டுவது - சுகம்தரும் உறவாகட்டும்,
வலியது - உறவில் மகிழ்வாகட்டும்,
----வேண்டியது - மகிழ்ச்சியான மலர்களாகட்டும்,

ஆம்!!!
*******உலகமே புன்னகை மலர்கள்
**************நிறைந்ததுதான்
*******கண்களின் காட்சிகள்தான் காரண
**************காயங்கள்.

புரிகிற தா,

நவீன் குமார் ரா

எழுதியவர் : நவீன் குமார் ரா (28-May-15, 11:24 pm)
பார்வை : 92

மேலே