மீழுமா என் மொழி

இனிய இரவின் மடியில்
இளைப்பார உறங்கிய எனக்கு
கனவாய் வந்து நினைவூட்டின
மலரும் நினைவுகள்...

வானில் மிளிர்ந்த நட்சத்திரங்களும்
மேகம் மறைத்தும் ஒளிரத்தவறாத நிலவும்
மரக்கிளைகளை அசைத்துஇருப்பை உணர்த்திய தென்றலும ்
மறந்து போனதோ இன்று எனக்கு.

என் குடும்பத்துடன் உணவுண்டது
என் தலைமுறை உறவுகளுடன் விடுமுறையை கழித்தது
திருவிழா சென்று விளையாட்டுப் பொருள்வாங்கியது
சென்றுவிட்டேன் கனவுலகிலேயே சிறுவயதிற்க்கு.

மேற்கூறிய நினைவுகள் இனி நினைத்தாலும் சாத்தியமா?
நாறிப்போன நாகரிக வாழ்வில் நகரத்து கலாச்சாரத்தில்
தமிழரென்பதையும் நம் பாரம்பரிய பழக்கங்களையும் மறந்து
அந்நிய மோகத்தில் ஊறித்திளைக்கிறோம் மனிதம் துறந்து தமிழை இழந்து.

விடியல் வந்தது கனவு கலைந்தது
ஏக்கம் தொற்றிக் கொண்டதுதொலைந்த வாழ்கையை எண்ணி
நம் மொழியும் பண்பாடும்மீழுமா இந்த நாகரிக மோகத்திலிருந்து
நான் ஓயமாட்டேன் என் மொழியை மீட்டெடுக்கும் வரை

எழுதியவர் : (30-May-15, 3:14 pm)
பார்வை : 93

மேலே