செம்மொழி

அகநானூறு சொல்லா
காதல் இல்லை!

புறநானூறு சொல்லா
வீரம் இல்லை!

பிள்ளை தமிழ் சொல்லா
தாலாட்டும் இல்லை!

திருக்குறளில் இல்லை
என எதுவும் இல்லை !

இதிகாசம் சொல்லிய
வாழ்வின் அர்த்தங்கள்!
காப்பியங்கள் சொன்ன
வாழ்வின் நெறிமுறைகள்!

இப்படி
ஓலை சுவடியின் ஓவியமாய்,
நம்மை 'செம்மை' படுத்த
செழுமையாய் வாழும்
தமிழே நம் 'செம்மொழியாகும்'.............

என்றும் அன்புடன்
எ. மனிமுருகன்

எழுதியவர் : (30-May-15, 1:15 pm)
Tanglish : semmozhi
பார்வை : 229

மேலே