மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம் - அறிவிப்பு
அன்புள்ள எழுத்து.காம் கவிஞர்களே,
”மானம் கெட்டவர்க்கே மரியாதை அதிகம்” என்ற தலைப்பில் ஒரு கவிதைப் போட்டியை அறிவித்தேன். 25 கவிஞர்கள் போட்டியில் பங்கு பெற்று தங்கள் படைப்புகளைச் சமர்ப்பித்துள்ளார்கள். நடுவர் குழு அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன். நடுவர் குழுவுக்கு தேர்வுக்கு வந்த 26 கவிதைகளைத் (ஒருவர் 2 குறுங்கவிதைகளை அனுப்பியுள்ளார்) தொகுத்து மின்னஞ்சலில் இன்று அனுப்புகிறேன். அவர்களது மதிப்பீடு வந்ததும் முதல் மூன்று நிலைகளை அடைந்தவர்கள் பற்றிய விபரத்தை அறிவித்து நடுவர் குழு சார்பாக பாராட்டையும் எங்களது கருத்தையும் தெரிவிப்போம். போட்டியில் பங்கு பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டு மற்றும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
முனவர் இரா. சுவாமிநாதன்
புதுச்சேரி
malar1991

