தண்ணி லாரி

தண்ணி லாரியே தண்ணி லாரியே
தண்ணி காட்டிட்டு போறியே!
தகிக்கும் வெயிலில் வேகற சாலையில்
தண்ணிய ஊத்திட்டு போறியே!
தாகத்தை போக்கிடும் வாய்ப்பு கிடைச்சும்
தவிக்க விட்டுட்டு போறியே!
தமிழகம் உன்னை வணங்கிட நினைச்சும்
தாறு மாறா போறியே!

இத்தனை வேகத்தில் எத்தனை பிடிக்க
ஏவி விட்டது யாருன்னை?
இங்குனைக் கண்டால் வானவில் குடங்கள்
எத்தனை வருது பார்த்தியா!
இல்லைனு சொல்லாம சொல்லிட்டுப் போறியே
எல்லையில் சண்டைக்கு போறியா!
இன்றைக்கு ஒருமுறை என்வாசல் நிற்பாயா
என்மனம் மகிழ வாரியா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Jun-15, 9:02 am)
பார்வை : 718

மேலே