காலத்தின் சாட்சியங்கள்

... "" காலத்தின் சாட்சியங்கள் ""...
முன்னுரை பக்கங்களின்
முடிவுரை அத்தியாங்கள்
முதுமை காதல்புறாக்கள்
பூபாலமிசைக்கும் முகாரிகள் !!!
கைபிடித்தே கடந்தகால
நினைவுகளை அசைபோட்டு
அசைந்து அசைந்து வரும்
வயதான தேரிவர்கள் !!!
அன்பானவள் கைபிடித்தே
ஆசையாய் நடைபயணம்
ரோமம் நரைத்தாலென்ன
ரோமியோ ஜூலியட் நாமடி !!!
இனியவளே அன்றும் என்னை
கைபிடிக்க கட்டிய சேலையில்
இன்றும் எந்தன் கைபிடித்தே
அதே கட்டிய சேலையோடு !!!
பசியாற்ற பொங்கியேடுத்து
பரிமாறிய பச்சையிலைகள்
உண்டு கழித்து கந்தலாக்கி
குப்பையெரிந்த குழந்தைகள் !!!
பெற்று வளர்த்தால்தானோ
நாமிங்கு பெருவழியில்
பெறாமலே இருந்திடலாம்
இறுதி இதுவென்றால் !!!
மண்ணறை வாழ்வுலகம்
அழைக்கும்வரை இப்படியே
இறுக்கப்பிடித்து நெருக்கமாய்
கடைமூச்சை விடைகொடுப்போம் !!!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...