காதல் நாட்காட்டி

என்னுடைய
நாட்காட்டியில்
எனக்குப் பிடித்த
நடிகனை
இடப்பெயர்ச்சி செய்தது
உன்னுடைய
இஷ்ட தெய்வம்

====================

உன்னைப்பற்றிய
நம்மைப்பற்றிய
குறிப்புகளிருக்கும்
என் வீட்டு
நாட்காட்டியும்
எனக்கு
அந்தரங்க டைரி
போலத்தான்

============================

நாட்காட்டியில்
எனது ராசிக்கு
இலாபம் என்று
போட்டிருக்கும் போதெல்லாம்
நீ
துப்பட்டாவை
மறந்துவிட்டு வருகிறாய்

============================

நாட்காட்டியின்
ஒவ்வொரு தாளையும்
எடுத்து எடுத்து
உனது பிறந்தநாள்
வரும்வரை
பார்த்துக் கொண்டிருப்பது
எனக்கான
காதல் பொழுதுபோக்கு

============================

உனது
பிறந்தநாளோடு
எனது நாட்காட்டிகளுக்கு
வி ஆர் எஸ்
கொடுத்து விடுகிறேன்
கிழிக்க
மனம் வராததால்

============================

நாம்
சண்டையில் இருந்து
சமாதானம்
நோக்கிச் செல்லும்
நாட்களை
வளர்பிறை என்றும்
சமாதானத்தில் இருந்து
சண்டை
நோக்கிச் செல்லும்
நாட்களை
தேய்பிறை என்றும்
காட்டுகிறது
நமது
காதல் நாட்காட்டி

============================

எனது
வாழ்க்கை எனும்
நாட்காட்டியில்
தினமும்
வந்துகொண்டிருக்கும்
சுப முஹூர்த்த தினமாக
நீ

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (1-Jun-15, 10:03 am)
Tanglish : kaadhal naatkaatti
பார்வை : 332

மேலே