என்றைக்கு கவலை கொள்வேன்

சில பிரியங்கள் ..
கரிசனமாகி..
சில கரிசனங்கள்..
காமமாகி..
சில காமங்கள்..
ஆசைகளாகி ..
சில ஆசைகள்..
இலட்சியங்கள் ஆகி.
சில இலட்சியங்கள் ..
நிராசைகளாகி ..
சில நிராசைகள்..
இன்னும் நெஞ்சில் இருக்குமென்றால்..
நீ சாதிப்பதற்கு என்று எதுவுமே இல்லை!
உன்னில் நீ கரைவதை
வேடிக்கை பார்ப்பதற்கு..
எப்போதும் தயார் நிலையில்
ஒரு உலகம்....
உன் முன்னே
விரிந்து கிடப்பதைப் பார்..
குளத்தில் விழுந்த
மழைத் துளி தேடும்
முயற்சியில் நீ..
வெற்றி பெரும் நாளில்
பழையன பற்றிக் கவலைப் படு..
இல்லையென்றால்..
உன்னை நரையேற்றும் காலம்
வந்து விடும் உன்னிடத்தில்..
நீ..அழைக்காமல் போனாலும்!


.

எழுதியவர் : கருணா (1-Jun-15, 1:37 pm)
பார்வை : 258

மேலே