நாட் குறிப்பு
இதுவரையில்..
புரையோடிய புண்களாய்
ரணங்கள் ..உனது நாட்குறிப்பின்
பக்கங்களில் நிரம்பிக் கிடந்தாலும்..
இனிமேலாவது..
புத்திக் கொள்முதல்கள்..
புரியாத தத்துவங்கள்..
சம்பளம் வாங்கி செய்த
செலவுக் கணக்குகள்..
சில கவலைகள்..
துரோகங்கள்..
ஆனந்தப் பொழுதுகள்..
துளிகளாய் வந்து விழுந்த
இன்பங்கள்..
அலுப்புற்ற குசலவிசாரிப்புகள்..
அத்தனையும் ..
அத்தனையும்..
அடிக்கோடிட்டு எழுதி வைக்கப்படாமல்
உன் நாட்குறிப்புப் பக்கங்கள்..
சுத்தமாகத்தான் .
இருக்கட்டுமே..!
இன்று கிடைத்தற்கரிய
இந்த வாழ்வை ரசித்தேன் என்றும்..
நாளையும் ரசிப்பேன் என்றும்..
எழுதி வைத்துவிடேன்..
எல்லாப் பக்கங்களிலும்..
ஒவ்வொரு நாளும்..!
நாட்குறிப்பில்
இதைத்தவிர..
நல்ல விஷயம்..
வேறு என்ன..
எழுதி விடப்போகிறாய்?