அந்த நிமிடங்கள்
ஒரு ..நடுப் பகல் நேரத்தில் ..
சாதாரணக் கட்டண
பேருந்துப் பயணத்தின்
வியர்வை நிமிடங்களில்..
உங்களுக்கு கிடைக்கின்ற
பேரனுபவம் ஒன்று ..
உங்களால் ..
மறக்க முடியாமல் போகலாம்..
அது..
தலையில் சுமையை ஏற்றிக் கொண்டு
இடுப்பில் மூக்கு வடியும்
குழந்தை ஒன்றை
சுமந்தபடி ..
கூலி வேலைக்கு போகும்
இளம் பெண்ணாகவும் இருக்கலாம்..
அல்லது..
பெற்ற பிள்ளை
மனைவியோடு வந்து
பஸ்ஸில் வலுக்கட்டாயமாக
ஊருக்கு வழியனுப்பி வைக்கப் பட்ட..
முதிய தம்பதியின் கண்ணீர்
கண்ட நொடியாகவும் இருக்கலாம்..
ஏன்..
கம்பியில் சாய்ந்து நின்றபடி..
எது பற்றியும் கவலையின்றி..
காதலனுடன் ..
செல் போனில் சிணுங்கலாய்
பேசும் ..
இளம் பெண்ணின்
முனகல்களாகவும் இருக்கலாம்..
எப்படியிருந்தாலும்..
அந்த பேருந்து பயணத்திலும்
ஏதோ ஒரு விஷயம்
உங்கள் வியர்வையை
மறக்கச் செய்யலாம் ..
எனவே..
ஏ.சி. பஸ் வரட்டும்
என்று வெயிலில் கிடந்து
காயாதீர்கள்..
புறப்படுங்கள்!
கவலைப்பட
எவ்வளவோ விஷயங்கள்
வெளியே இருக்கின்றன!