பின்வாங்கு முன்னேறு
தினவு மறந்த தோள்கள்..
நடுங்கும் தொடைகள்..
அதோடு ..கையில் இருந்த ஆயுதங்கள்
எறிந்து பல காலமாகிய போது..
ஒரு தியான மயக்கத்தில்
இன்னும் கிழிந்து போகாத மனத்தில்
ஒரு பின்வாங்கல் ..
என் கனவுகளில் ..
வெண் சாமரம் வீசும் ஆட்களுமில்லை..
வெண்கொற்றக் குடை பிடிக்கவும் எவனுமில்லை..
ஜெய பேரிகைகள்..
பெரிரைச்சல்கள்..
முழக்கங்கள்..
எதுவுமில்லை..
ஒரு ஓடையின்
சல சல என்ற சப்தம் மட்டும்..
யாருக்கும் கேட்காமல்..
நனைத்துச் செல்கிறது
என்னை!
இந்தப் பதுங்கலுக்கு.. பெயர்தான்
தியானமோ!
புரியாமல்தான் கேட்கிறேன்!