என் கவலை என்னோடு
ராஜராஜன் கட்டிய
பெரிய கோயில் பற்றியோ..
கட்டபொம்மனைப் பற்றியோ..
நம்ம ஆள் ..
கங்கை கொண்டதோ..
கடாரம் வென்றதோ....
எதுபற்றியும் ..
எனக்குப் பெருமையில்லை..
என்னைப் பற்றி
என் பேரன்களும் பேத்திகளும்
என்ன சொல்வார்களோ
என்பது பற்றித்தான்
எனது கவலை..!
..
தமிழன்டா..
தமிழு..தமிழு..
..
ம்ம்..
என் கவலை..
என்னோடு!