இப்படி ஆகட்டும்
சார்..
அதிகமான தொகையை
தந்து விட்டீர்கள்..
நூறு ரூபாய்
கூட இருக்கிறது..
அபராதத் தொகையில் .
அதிக லோடு ஏற்றி வந்த
லாரிக்காரரிடம்
பணத்தை திருப்பி தந்தார்
போக்குவரத்து காவலர் .!
*****************************************************
சார்..
சாதிச் சான்றிதழ்
வேண்டும்..
அதெல்லாம் கொடுப்பது நிறுத்தி
நான்கு மாதம் ஆகிறதே..
சாதி என்ற இடத்தில்..
கோடு போட்டுத் தந்துவிடுங்கள்..
பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் !
*****************************************************
சார்..
என் மதம் ..
மன்னிக்கவும்..
உங்கள் மதம் பற்றிய கவலைகள்
ஏதும் எங்களுக்குத் இல்லை.
உள்ளே போங்கள்..
..
சலீம் பாய்
ஸ்ரீரங்கம் கோயிலில் நுழைந்தார்!
*****************************************************
தேர்தல் நேரத்தில்
நண்பர் வீட்டுக்கு
மாம்பழக்கூடை
அனுப்பிய
மந்திரி ..கைது
..
மக்கள் கல்லால் அடிக்க
ஓடி வந்ததால்
தொகுதியில் பரபரப்பு!
*****************************************************
இந்தியா முழுவதும்
ஒரே நாளில்
நடத்திய சோதனையில்
மூன்று பேர்
வருமான வரி கட்ட
மறந்திருப்பது
தெரிய வந்தது..
மூவரின்..
கருணை மனு மீது
ஜனாதிபதி விசாரணை!
*****************************************************
1200 க்கு 728 மார்க்குகள் பெற்று
மாநிலத்திலேயே
முதலாவது இடத்தை பெற்ற
மாணவி ..பேட்டி!
தமிழ் இலக்கியத்தில்
பட்டம் பெறுவதே என் ஆசை
..
பெட்டிச் செய்தி :
பங்குச் சந்தை..எதிரொலி...
ரூபாயின் மதிப்பு :
ஒரு இந்திய ரூபாய் = 148 அமெரிக்க டாலர்கள்
*****************************************************