மீண்டும் காதல் சொல்ல வந்தேன்

நான் உன்னை காதலிக்கிறேன்
அன்பே அழகே
உன் விடையை சொல்
அதையே முடிவாய் சொல்
நடும் பொழுது நாத்து
விளைந்தபின் நெல்
நட்பாக இதயத்தில் நின்றாய்
காதலாக இறுதிவரை வா
காதல் குற்றம் இல்லை
காதலிப்பதும் குற்றம் இல்லை
அது உனக்கு தெரியும்
காதலிக்க மாட்டேன்
என்பது உன் வாயின் வார்த்தை
காதலை என்னால்
வெளிபடுத்த முடியவில்லை
உன் பார்வையின் சிரிப்பில்
காண்கிறேன்....
காதல் சாலை ஒத்தைஅடி
பாதை தான்
நீ முன் செல்ல
நான் பின் தொடர்கிறேன்
ஒத்து கொள் அடி
இருவரும் கை கோர்த்து செல்வோம்
இடம் போதாது என்றால்
உன்னில் பாதி சேர்த்துகொள்
கூடை பந்தில்
பந்து கூடையில் தங்கினால் தான்
புள்ளிகள் கொடுக்க படும் என்றால்
எப்படி இரு அணிகளும் வெல்லும்
நட்பில் காதல் வர கூடதா
உன் இதயத்திரிக்கும்
கூடை பந்திற்கும்
வித்தியாசம் சொல்
பெற்றோர்கள்
சம்மதம் சொல்வார்கள்
பயத்தின் உச்சத்தில்
நீ இல்லை

ஆனால் இப்பொழுது
பயத்தின் உச்சத்தையும்
தாண்டி நிற்கிறேன்

மீண்டும் இதய வாசலில்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (2-Jun-15, 8:03 pm)
பார்வை : 443

மேலே