இராமானுசர் துதி

பெரும்புத்தூர் உதித்த பாம்பணைத் தோன்றல்
நாராயண மந்திர நற்பொருளறிந்து – தளையறுத்து
பாரோரறிய கோபுரமுடி பாய்ந்துரைத்த அருமுனி
இராமானுசா, வாழிய இன்னுமோர் ஆயிரம்
அரங்கனை பொருபடை சீற்றம்தனில் காத்து
பெருமிடர் களைந்து வைணவம் காத்து
அரும்செல்வ பிள்ளையை மீட்டுக் கொண்ட
இராமானுசா, வாழிய இன்னுமோர் ஆயிரம்
வர்ணம் களைந்து வாணரும் பாணரும்
மறையோதும் வேதியரும் மாலவனை தொழும்
முறையாய் நித்தியம் வரைந்த பெரியார்
இராமானுசா, வாழிய இன்னுமோர் ஆயிரம்