உழவர் ஊழ்வினை

மண்ணை அளைந்து தண்ணீர் பாய்த்து
கண்ணிமையாய் பயிர் காத்து – எமக்கு
ஊண் கொடுத்து உய்விக்கும் உழவரே
உண்ணாமை சாபம் உமக்களிதது யாரோ?

காணும்பொருள் வாழ் கார்முகில் வண்ணா
மண்மகளுறை மலர் மார்பா – இவ்உழவர்
கண்ணீர் கணமே அகல, அருள்வேண்டி யாம்
பண்ணிசைத்து உம்மை பாடுதுமே தினமும்

எழுதியவர் : வாசு சீனிவாசன் (2-Jun-15, 9:35 pm)
சேர்த்தது : Vasu Srinivasan
பார்வை : 173

மேலே