நரசிங்கன் துதி

மழலைச் சொல்லின் மாண்பினை காக்க
பொழுது சாயும்கால் பிளந்தத் தூண்தோன்றி
விழிச்சுடர் அழல, வானோர் அஞ்சியோட
பேழ்வாய் அகன்று பேரிடியாய் முழங்கி
பழித்த இரணியனை படிதனில் மடிக்கொண்டு
கிழித்து, உதிரமும் குடித்துக் கொண்ட நரசிங்கா
ஊழ்வினை ஒழித்து எம்மையும் கொள்வாய்.
அழகியசிங்கா நின்னை அடிபணிந்தோம்