அவ நீ தானா

அவளோடு செல்லும் பார்வை சொன்னதே
அன்றோடு நெஞ்சம் என்னை கொல்லுதே
காற்றோடு பூக்கள் கொஞ்சி பேசுதே
கண்வைத்து உற்று பார்க்க தோணுதே.
விடியாத இருளும் கூட விடியுதே
விரல் தீண்டி பேசிட உள்ளம் ஏங்குதே
விடிகின்ற காலை கூட உறங்குதே
வீண் பேச்சு பேசிட உன்னை கேட்குதே.
மணல் மீது வானம் எல்லை விரிக்குதே
மனம் உன்னை அருகில் வைத்து பாக்குதே
மழை கூட சற்றே எல்லை மீறுதே
மரமெல்லாம் உன்னை காண துடிக்குதே.
வழியின்றி தேரை கல்லில் வாழுதே
வலியோடு ஈச்சம் பூக்கள் பூக்குதே
வரமாய் நீ வந்தாய் நெஞ்சங் கூட்டுல
வரைவேனே உன் விழியை பிகாசோ வீட்டிலே..