அரவனைப்பு
என்னை பிரிந்து
எப்படி துடிக்கிறது
உந்தன் இதயம்!...
எந்தன் இதயத்தில்
கரையா உந்தன் நினைவு
அகவலாய் ஒலித்திட!
பற்றற்று பக்தியாய்
எப்படி வாழ்வது
இவ்வுலகில்!...
தனிமை விரக்தியில்
பயணிக்கிறேன்!...
நாம் தவறவிட்ட
காதல் ஒன்று
ஆறுதலாய் அரவனைக்கும்
என்ற நம்பிக்கையில்!.