ஒன்னும் ஒன்னும் பூஜ்யம்

"ஆரப்பா அது அப்பாரு தோட்டத்துல
கேனியோரம் ஒக்காந்து கேவி கேவி அழுகுறது
விசுக்குன்னு காத்தடிச்சா விழுந்துருவ கிணத்துக்குள்ள
எந்திருச்சு வந்திரப்பா ஏகப்பட்ட தன்னியப்பா...."

"ஆடு மேய்ச்சு வர்ற அழகுமல தாத்தா
பாவம் வந்து சேரும் யாரும் எண்ணப் பாத்தா
படிச்சிருந்தும் கூறுகெட்ட என் சேதி கேட்டா
பரிதாப படமாட்ட அழகுமலத் தாத்தா...."

"காளியம்மா மகனுக்கு கவலை என்ன கவலை
கண்ணுல வர்ற தண்ணீ கமலத் தண்ணீ போல
பொட்டப்புள்ள மாதிரி பொங்கி பொங்கி அழுவாம
பொறுமையா நடந்தது என்னன்னுதேன் சொல்லு....."

"சீமையில படிக்கிறப்ப சிநேகிதம் வெச்சிருந்தேன்
சிறுக்கி ஒருத்தி என்னய சிரிச்சு மயக்கிபுட்டா...
பாவிப்பய நானும் படிக்கவந்த புள்ளகிட்ட
பதிலுக்கு பல்லக் காட்டி பள்ளத்துல விழுந்துபுட்டேன்....

மல்லிகப் பூவாட்டம் அவ மனசு ரொம்ப வெள்ள
அந்த மன்மதனும் பாத்தான்னா மறந்திடுவான் வில்ல
குழி விழுக சிரிசிருவா கொஞ்ச நேரம் நின்னு
ஒரு கொசு என்ன கடிச்சாலும் கலங்கிரும் அவ கண்ணு...

மத்தியான வெயிலடிக்கும் மாடியில நின்னிருப்பா
இந்த மட்சானப் பாக்கனும்னு மணிக் கணக்கா காத்திருப்பா
காலார நடந்து போயி கடக்கு கீழ நின்னுக்குவேன்
கண்ணும் கண்ணும் கலந்து பேசும் காதல் கத பத்தாயிரம்......

நெத்திய சொறிஞ்சா நெருங்கி நெருங்கி வரணும்
பொடனிய சொறிஞ்சா போய் ஒளிஞ்சுகிரணும்
கன்னத்த தடவிகிட்டா காலைல பாப்போம்னு
கைச்சைகை வெச்சிருப்போம் கடவுளுக்கும் தெரியாது.....

அவ மனசுல பாதிய என் உசிருக்குள்ள ஒளிச்சு இருந்தேன்
என் உசிர்ல பாதிய அவ மனசுக்குள்ள மரச்சிருந்தா...

பக்கத்துக்கு வீட்டுல பச்சோந்தி ஒருத்தன்
எங்கள வேவு பாக்கிறதே அவன் வேலைய இருந்தான்
வயித்து கடுப்புக்கார அந்த வழுக்க மண்ட நாயி
வத்தி வெச்சுப் புட்டான் அவ அப்பன்கிட்டப் போயி

எளிய சாதிப் பயலோட என்னடி ஒனக்குப் பழக்கம்னு
அடிச்சுப் புட்டான் அப்பன் காரன் அம்புட்டு அடி அவள
இரும்புக் கம்பிய காய வெச்சு இழுத்தானாம் ஒரு இழுவ
சனியம் பசிச்ச சாதியில ஒரு சாவு வந்து விழுவ....

என் கண்ணம்மா கன்னத்துல கையளவு காயம்
ஒதட்டோரம் குத்துனதுல ஒறஞ்சு போச்சு ரத்தம்
முதுகுலையே மிதிச்சிருக்கான் மூலையில விழுந்திருக்கா
சாலையில போன சனம் சன்னல் வழி பாத்திருக்கு...

பச்சப் புள்ள பூ ஒடம்பு எம்புட்டுதேன் தாங்கும்
படுக்கையில நெனச்சு அழுவேன் பாய் நனைஞ்சு போகும்
மருந்து கூட போடாம போனான் பாவி மட்ட
பூச்சி மருந்த குடிச்சு இவ போய்ட்டா சாமிகிட்ட...

உசிரோட இருந்தப்ப ஒண்ட விடாம செஞ்சானே
சாவுல நான் சேர்ந்துபுட்டாசாதி வந்து பிரிச்சிடுமா?
உசிரோட இருந்தாத் தான சாதி வந்து பிரிக்கும்
இந்த ஒடம்ப விட்டு அவள போய் சேர எது தடுக்கும்?"

தாத்தா அப்புறம் கேட்டதெல்லாம்
தண்ணி செதறும் சத்தம்-அது
பழகி வெச்ச மயிலைச் சேர
அந்தப் பய குடுத்த முத்தம்.

எழுதியவர் : தேனி ரானா ஜெகதீஷ் (4-Jun-15, 10:08 am)
சேர்த்தது : ரானா
பார்வை : 159

மேலே