அச்சோ ஒரே கவிதை கவிதையா வருதே
அச்சோ ஒரே கவிதை கவிதையா வருதே. ..
---------------------------------------------------------------
"டார்லிங்"
"சொல்லுடா"
"டார்லிங்ங்"
"சொல்லுடா"
"டார்லிங்ங்ங்"
இம்முறை
திரும்பி முறைத்ததில்
திணறிப் போனேன்
அப்பப்பா
எத்தனை அழகு நீ ;-) ..
------------------------------------
முன்னிரவில் ஓர் நாள்
"சட்டுனு ஒரு கவிதை சொல்லேன்"
அழகாய் இதழ் பிரித்து
நீ கேட்க
"இதழில் இதழ் கோர்த்து
மோக வண்ண
மையெடுத்து
நீயொரு முத்த
கவிதை எழுதேன்"
மறுக்காமல்
நானும் சொல்லி விட்டேன்... ;-)
-----------------------------------------------------
"அழகா இருக்கடா"
ரசனையாய் நான்..
"ஆரம்பிச்சுட்டியா"
பொய் கோபத்துடன் நீ
"இப்போலாம்
ரொம்பவே அழகா இருக்க"
உனை உற்றுப் பார்த்தபடி நான்
"அப்பே நீ என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்ட"
இயல்பாய் சொல்லிவிட்டாயே..
இன்று முதல்
உன் இயல்புக்கும்
காதலியானேன் :-) ..
---------------------------------------
"கவிதை
எழுத சொல்லிக் கொடேன்"
கொஞ்சலாய் நீ கேட்க
"அட லூசே
உன்னையே
உனக்கெப்படி
சொல்லித் தருவேன் ;-) ..
-----------------------------------------