நான்கறை எந்திரம்

நான்கு அறை வீடாம்!
நான் பிறந்த தினத்திலிருந்து அதில் வேலை செய்பவர்களுக்கு விடுமுறையே இல்லையாம்!
நான்கில் இரண்டை,
அம்மை அப்பனுக்கும், தம்பி தங்கைக்கும், தானமளித்து விட்டேன்!
இடப்புறத்தின் மேல் அறையை இரவல் தந்து விட்டேன் எந்தன் நண்பனுக்கு!
என்னயோசிக்கிறீர்கள் ஒன்று குறைகிறது என்றா?
அது என் காதலியின் அறை, அவளிடம் அளித்த நேரம் சரியில்லையோ என தெரியவில்லை அவள் அறையின் ஈசான மூலையில் இடி விழுந்து விட்டது!
இடிந்த விதாணத்தின் வழியாக விண்மீன்களை எண்ணிக்கொள்கிறேன்!
அவ்வபோது அவள் ஞாபகம் வரும்போதெல்லாம்!!!!.....

எழுதியவர் : தமிழ் பிரியனà (5-Jun-15, 2:29 pm)
சேர்த்தது : நமச்சிவாயம்
பார்வை : 38

மேலே