நியந்தா

இப்பொழுதெல்லாம்
உன்னைப் பற்றி
பேசுவதைக் குறைத்து
கொண்டேன்...
நிறைய நினைக்கிறேன்....

முப்பொழுதும்
கொண்ட கற்பனைகளை
கலைய விட்டேன்...
எப்பொழுதாவது
அழுது விடுகிறேன்....

அப்பழுக்கில்லாத
உன் குரல் தேடும்
முயற்சி மறந்தேன்...
முயல் குட்டிகளென
கீச்சிடும் உன் அழைப்புக்குள்
நினைவுகளாகிறேன்...

நீ வருவாய் என
இனி இருக்க தேவையில்லை...
நீ இருந்தாய் என
இருப்பதற்கு நீ
தேவையே இல்லை..

இருந்தும்...
இருக்கிறாய்....
இல்லாமலும்..
இருப்பது போல..

கவிஜி

எழுதியவர் : கவிஜி (5-Jun-15, 2:46 pm)
பார்வை : 131

மேலே