நினைவுகள் - சகி

அவன் நினைவுகள்

திருவிழா கூட்டத்தில்
உன் விழிகள் அலைபாயுவதை
கண்டேன் ....

நாம் சந்தித்தே
வருடங்கள் கடந்துவிட்டது ...

மறந்திருப்பாய் என்றே
எண்ணினேன் ....

உன் விழிகள்
என்னை தீண்டிசென்ர
நொடியே உணர்ந்தேன் ...

பள்ளிப்பருவ நாட்கள்
உன் மனதிலும்
மறையவில்லை என்று...

உன் பார்வையின் மௌன
மொழிகளை மறக்கவில்லை
அவள் நெஞ்சம் ...

எழுதியவர் : சகி (5-Jun-15, 3:24 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 289

மேலே