காதல்

சிறு பார்வை
சிறு ஆதிக்கம்
சிறு புன்னகை
சிறு வார்த்தை
சிறு துள்ளல்
என்னை கண்ட என்னவனின் முகத்தில் ….
சிறு வெட்கம்
சிறு அடக்கம்
சிறு நாணம்
சிறு கர்வம்
என்னவனை கண்டதும் என் முகத்தில் …
முதல் அன்பு
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் பரிசு
முதல் தீண்டல்
முதல் உரிமை
இவை அனைத்தும் நம்மை இணைத்தது……
முதல் சண்டை
முதல் கோபம்
முதல் வருத்தம்
முதல் பிரிவு
முதல் வலி
இவை அனைத்தும் நம்மை பிரித்தது…
ஆனால்,
பிரிந்தும் என்னை துரத்திகொண்டே வருகிறது
அவனது நினைவுகள் மட்டும்
ஆம் ….!
நினைவுகளுக்கு கூட தெரிந்து இருக்கிறது
என்னுடன் அவன் இல்லை என்பது ……..
ஏனோ ,
அது தெரியவும் இல்லை
புரியவும் இல்லை
தனியாக இருக்கும் என் மனதிற்கு இன்னும் …..
காதல்... ! -
- நம் இருவருக்கும் ஒன்று தானே ...!
வலி....!
- எதற்கு எனக்கு மட்டும்...? ?
எப்படி உனக்கு மட்டும்
என் நினைவுகள் வராமல் இருக்கிறது ..?
உன்னை என் நினைவுகள் தொடரவில்லையா ….?
என் காதல் உன்னை கேட்கும் என்னவனே
என்னை ஏன் உன் நினைவுகளுடன் விட்டு சென்றாய் என …….?
பதில் கூற தயாராய் இரு …….>>>>>>>>>>