ஆழித் தாண்டவம்

கடல் தாயின் வளர்ப்புகள் ஒருநாள்
கறிச்சோறு கேட்டு அவளைக் குடைந்தன
என்ன கறி இருக்கும் என ஏக்கதுடன்
தன் கரையைப் பார்க்க வந்தாள்

கறிச் சோறு கேட்டவை எல்லாம்
கறியாகிக் கிடப்பதைப் பார்த்து அழுதாள்
அவள் அழுது வைத்த கண்ணீரை
அழுத்தத்துடன் தூக்கி எறிந்தாள்

அது வாரிக் குடித்தது மனித ஜாதியை
அவள் வாட்டத்தின் சாபம் பலித்தது
இழுத்து வந்த சதைகளை எல்லாம்
இரையாக எடுத்து ஊட்டி விட்டாள்

உண்டு மிச்சத்தை உப்புக்கண்டம் போட்டு
உலர்த்த ஒதுக்கினாள் தன் கரையில்..
வெற்று உடலென்று விம்மி அழுத ஜனம்
வேதனைக் கண்ணீரை வீசியது கடலில்..


என்றும் அன்புடன்,
VC
(விஸ்வநாதன் சந்திரன்)
ஜூன் 06, 2015

எழுதியவர் : விஸ்வநாதன் சந்திரன் (6-Jun-15, 3:57 pm)
பார்வை : 79

மேலே