திருடி கொள்கிறேன்

திருடி கொள்கிறேன்

கருப்பு ரோஜாவை இதுவரை நான் பார்த்தது இல்லை...!!!
இதோ பார்க்கிறேன்..!!!
வெள்ளை இலையின் மேல் ஒரு கருப்பு ரோஜா..!!!!
இந்த ரோஜா முகம் மட்டும்
ஏன் எப்போதும் வாடியதே இல்லை...!!!
காதலில் நான் அதிஷ்டகாரன் தான்....!!!!
முதல் சந்திப்பில் இந்த கருப்பு நிலா..!!!!
என் கை பிடித்ததில்...!!!
அனைத்து சிகிச்சையும் முடிந்தும்.!!!!
அந்த இடம் விட்டு நகர மனம் இல்லை..!!!!
கையை மட்டும் தானே பிடித்தாய்...!!!!
எப்படி கை மாறியது
என் இதயம்..!!!
ஒரு சில மணிநேரம் உன்னை பார்த்ததிற்கு...!!!
ஒவ்வொரு இரவும் ஏன்
என் உறக்கத்தை கெடுக்கிறாய்..!!!!
ஒவ்வொரு இரவும் ஒத்திகை பார்க்கிறேன்...!!!!
உன் இடத்தில் என் காதலை சொல்ல...!!!!
பகல் வந்ததும் பயமும் சேர்ந்து வருகிறது...!!!
எங்கே என்னை மறுத்துவிடுவாயோ என..!!!
வேன்டாமடி பெண்னே என் காதல்
வேதனைகள் எனக்குள்ளே
போகட்டும்...!!!
உன் நினைவுகளை மட்டும் கொஞ்சம் திருடிக்கொள்கிறேன்...!!!!

எழுதியவர் : முருகன் கவி (7-Jun-15, 2:31 pm)
Tanglish : thirudi kolkiren
பார்வை : 149

மேலே