கனாக்களில் மட்டும் உன்னோடு வாழ்ந்து கொள்கிறேன்

உன் கை விரல் பிடித்து
நடந்திட்ட சாலையில்
நான் மட்டும் செல்லும்
போது தெரிகிறது தனிமையின் வலி.

மெல்ல கடந்து போன நொடிகள் யாவும்
வேகமாய் நகர்கிறது
இப்போது

பிரிகின்ற நொடிகள் எல்லாம் உன் நினைவுகள்
மட்டும் என் கண்ணோடு....
கனாக்களில் மட்டும் உன்னோடு வாழ்ந்து கொள்கிறேன் ....
விடிகின்ற பொழுதில் கனவுகள் கலைந்து போய்
கண்ணீர் துளிகளோடு விடிகிறது .


இரவுகள் மட்டும் கனக்கிறது ...

உன் மௌனகளிலும் ,
என் கண்ணீரோடும்.. .
மெல்ல வாழ்கிறது என் காதல் மட்டும்..

இரவுகள் மட்டும் நீள்வது இல்லை ,
உன் பேரை உச்சரிக்க மட்டும்
துடிக்கிறது உதடுகள் மட்டும் ,
வெறுமையான பாலையில் உன்
நிழல் தேடி அலைகின்றேன்...

தனிமையில் என்னை விட்டு விட்டு
எங்கேயோ செல்கிறாய்...
தனிமையில் அழுகிறேன்....
காதலை வெறுகின்றேன்...

உன் நிழலினில் ஒரு ஓரம்
ஒரு நொடி வாழ துடிக்கிறேன்..
நீ என்னை தாண்டி.
தினம் பலமுறை சாகின்றேன் ...

என் தனிமைக்கு இனிமை கொடு....
இல்லை..........
என்னை காதலில் தவிக்க விடு...

எழுதியவர் : டோமேசன் ச (7-Jun-15, 2:12 pm)
சேர்த்தது : டோமேசன்
பார்வை : 106

மேலே