துளிப்பா ஹைக்கூ கவிஞர் இரா இரவி

துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !

மனிதனுக்கு மட்டுமல்ல
கோயில் யானைக்கும் தேவை
நடைப்பயிற்சி !

உங்க பற்பசையில்
உப்பு இருக்கா ?
வேப்பங்குச்சி !

கேளுங்க கேளுங்க
கேட்டுக்கிட்டே இருங்க
இழப்பீர்கள் செவித்திறன் !

தேவை கவனம்
உண்மை இல்லை
விளம்பர மொழிகள் !

பெரிய நிறுவனம் தயாரிப்பு
விலையும் மிக அதிகம்
சட்டையில் இல்லை பை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Jun-15, 8:20 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 97

மேலே