மௌன மொழி

வாயிருந்தும் பேச முடியவில்லை
பேச முயன்றும் வார்த்தை வெளிவரவில்லை ...

தூர நிற்பவரிடம்
சைகையால் பேசுவது போல
அருகே நிற்பவரிடமும்
உரையாட வேண்டிய நிலை...

கண்ணால் பேசி
காதல் வளர்ப்பவர் நடுவே
என் கருத்துக்களை பகிர்ந்திட
கண்களை உபயோகப்படுத்துகின்றேன் ...

"வாயாடி " என்ற சொல் எனக்கு பொருந்தாது
ஏனெனில் நான் அமைதியான
கடவுளின் குழந்தை...

எனக்கு "தன்யா" என்று
பெற்றவர் சூட்டிய அழகிய பெயர்
"ஊமை , சிறப்பு குழந்தை ..." என்று
மற்றோரால் மாற்றி அழைக்கப்பட்டது ....

ஐயோ பாவம்! என்ற
அனுதாப வார்த்தையை
நான் விரும்பியதில்லை .....

என் விருப்பு வெறுப்புகளை
மௌனமாய்
படைத்தவனிடம் சமர்ப்பித்தவாறு
சாதிக்கவே விரும்புகிறேன் -
சரித்திரம் படைத்திட!!!

எழுதியவர் : த.ராமிஷா (8-Jun-15, 12:49 pm)
Tanglish : mouna mozhi
பார்வை : 74

மேலே