உன் உயரம்
வாழ்வில் உயர வேண்டும்
என்ற கனவு உன்னில் உண்டு,
ஆனால்
உன் நினைவில் பல சலனங்கள்!
சலனத்தில் உன் பாதை
மறக்கின்றது உன் மனம்,
வெவ்வேறு கருத்துக்களை
கேட்டு சுய சிந்தனை இழந்தாய்,
உன் வாழ்கை எதற்காக
என்று அறிந்தால்தான் - உன்
உயரத்தின் அளவினை அறிவாய்!
இல்லாவிடில்
பழுதோடு உயர்ந்து
பயனில்லாமல் அழிந்துவிடுவாய்!
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
