நமது முன்னோடிகள்

கம்பிகளுக்குள் பூட்டிக்கொண்டு
கான்க்ரீட் கல்லறைகளுக்குள் அடைபட்டு
செல்போன்களில் குசலம் விசாரித்து
மனவியாதியே மாத்திரையாக்கி
மனிதத்தை தொலைத்துவிட்டு
இன்றைய பொழுதை இரவல் தந்து
நாளைய கவலைக்கு நாளை வீணாக்கி
தன்னலத்தைப் பேணிக்காத்து
தரித்திரர்களாய் வாழுகின்றோம் ..
போலிச் சிரிப்புகளில் புன்னகை விற்றோம் ..
பொய்யிலே படுத்துறங்கி போகங்கள் பெருக்குகின்றோம்
புல்லரை கொண்டாடுவோம் புத்தரை விரட்டிடுவோம்
புது உலகம் படைத்தவர்கள் ..
நாம் புதுமைக்கு பேர் போனவர்கள் ..
நல்லவர்கள் நம் மூதாதையர்கள் ..
நம் பெருமை காணாது நமனிடத்தை சேர்ந்தவர்கள் ..
நமக்கு நாமே முன்னோடிகள் !

எழுதியவர் : கருணா (8-Jun-15, 10:40 pm)
பார்வை : 218

மேலே