உடலும் உயிரும் - உதயா

இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது
என்னுடலின் முக்கால் பாதியை
கண்ணில் கண்டு

காணும் சேதியை
இரண்டுநாள் முன்பே
கைப்பேசியில்
அனுப்பி வைத்துவிட்டேன்

அவளின் கால்களை
என்வீட்டின் வாசக்காலிலும்
அவனின் கண்களை
என் தெருவின் சாலையிலும்
பசைப் போட்டு ஒட்டிக் கொண்டாள்

இரவென்ன பகலென்ன
பசியென்ன உறக்கமென்ன
இரு நாட்களுக்கு இவை
வந்தாலென்ன போனாலென்ன
யாதுமாக என் நினைவுகள் மட்டும்
அவளின் நினைவு ஓட்டத்தில்

அவள் உயிரினை
அவள் கண்ணில்கண்டபோது
தம் மக்களும் பேரன் பேத்திகளும்
அருகாமையிலே இருந்தமையால்
உள்ளமெனும் பெட்டியினில்
அவள் உணர்ச்சிகளை
பூட்டி வைத்துக் கொண்டாள்

அறுசுவை விருந்து
பரிமாற்றத்தின் போது
மணவாழ்க்கையின் தொடக்கத்தில்
அவன் உணவு ஊட்டினானே
இத்தனை ஆண்டுகள் தவம் கிடந்தேன்
மீண்டும் அவ்வரம் கிடைக்குமாயென
அவளுள் ஏக்கத்தின் ஓட்டம்

உணவருந்தும் நேரத்தில்
உணவை உண்ணுவிட்டு
மிக விரைவாக எழுந்து செல்பவன்
இன்றோ பேரக் குழந்தைக்கும்
சென்று விட்டனரே இன்னும்
எழவில்லையே என எண்ணிக்கொண்டே
பாத்திரங்களை எடுத்துக் கொண்டு
சமையல் அறைக்கு சென்றாள்..

அங்க என்ன மா செய்யுற
என என்சத்தம் அவள் காதில்
விழுந்த உடன்
சிட்டாக பறந்துவந்து
என்ன மாமா என்று கேட்டாள்

ஆ.......... காட்டுயென
நான் உணவினை கையில்யேந்த
நான்கு கண்களின்
கண்ணீர் ஜோதியில்
உடலும் உயிரும்
ஒன்றினைத்தது .....

எழுதியவர் : udayakumar (8-Jun-15, 11:27 pm)
பார்வை : 346

மேலே