பொறியில் சிக்கிய பொறியியல்துறை
பொறியில் சிக்கிய பொறியியல்துறை
உலகிற்கே ஒளிதந்த மின்னியல் பொறியாளன்
“இன்று இருட்டில்”
தொலைதொடர்புக்கு வித்திட்ட மின்னணுவியல் பொறியாளன்
“இன்று தொலைதொடர்புக்கு அப்பால்”
உலகத்தையே கணினிமயமாக்கிய கணினி பொறியாளன்
“இன்று எலியாய் மூலையில்”
விண்ணை முட்டும் கட்டிடங்கள் கட்டிய கட்டிட பொறியாளன்
“இன்று தலைதட்டும் குடிசையில்”
இயந்திரங்கள் தொழிற்சாலையில் உருவாக்கிய இயந்திரவியல் பொறியாளன் “இன்று தெரு வீதியில்”
விஞ்ஞானத்தால் உலகை முன்னேற்றிய பொறியாளன்
“இன்று பொருளாதாரத்தில் பின்நோக்கி செல்கிறான்”
பொறியியல் பட்டதாரி பலர் இன்று வேலையின்றி
மீதி பேர் உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி
பொறியியல் ஆசிரியர் பலர் உழைக்கிறார்கள் ஊதியமின்றி
உணவினில் கலப்படம் ... ! உண்டவனுக்கு அன்றே சாவு....!
கல்வியில் கலப்படம்......! கற்றவனுக்கு தினம் தினம் சாவு .... !
இன்று பொறியாளனின் வாழ்வு பொறியில் சிக்கிய எலியாய் .....
“அரசாங்கமே பொறியியல்துறையியல் வேலைவாய்ப்பை உண்டாக்கு
காற்பொரேட் நிறுவன முதலாளிகளே பொறியாளனுக்கு நியாமான ஊதியத்தையளிப்பீர்
தனியார் கல்விநிறுவனங்களே கற்பிக்கும்
ஆசிரியரை பட்டினி போடாதீர்
ஆசிரியர்களே மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியளியுங்கள்
மாணவர்களை முன்னேற்றுங்கள்
மாணவர்களே போரடுவோம் பொறியியல்துறையை காப்பாற்றுவோம்”

