ஒன்றும் பிடுங்காதீர்
விளையாட்டாய்
பிடுங்க நினைத்து
செடியை நோக்கி நகர
அவசரமாய் அழைத்ததில்
அப்படியே ஓடினேன்
குளக்கரையில் துணிதுவைத்து
முடித்திருந்த அம்மாவை நோக்கி..
......
மூன்றாவது முறை உருளாமல்
தாங்கிப்பிடித்த மரமொன்றால்
தப்பித்தனராம் பேருந்திலிருந்த
நாற்பது பேரும்.
......
பதட்டமாய்
தொலைக்காட்சியிலிருந்து
கவனம் திருப்பி செல்பேசியில்
மகனை அழைக்க
மயிரிழையில்
தப்பித்ததாக சொன்னான்.
....
பிடுங்காமல் விட்டதற்கு
இவ்வளவு பெரிய
நன்றியா??!!
---கனா காண்பவன்