அஃது யாதென அதுவே சொல்லும்3
![](https://eluthu.com/images/loading.gif)
பசுந்தழைக் கிளையினுள்
பழநிற அலகுடன்
கிகிக் கிகிக் கிகியென
மொழிக் கிள்ளை...!
******
குருகுலம் புகுந்ததில்
குரலிசை அறிந்திடா
திருப்பினு மினிப்புடன்
குயில் கூவல்...!
******
இருமலை யிடுக்கினுள்
பசுந்தளிர் பரப்பதில்
புகுந்தெனைத் தொடவரும்
புதுத் தென்றல்...!
******
கடல்தவழ் படகென
பதமுடன் மிதந்தெனைக்
கவிழ்த்திட விழித்திடும்
எழில் அன்னம்..!
******
கார்முகி லூர்வலம்
வான்வழி யூர்கையில்
நாட்டிய மாடிடும்
மயில் நீலம்!
******
ஊற்றது ஓவென
உறுமொலி கொண்டுதன்
நீர்த்துகள் மேவிட,
திகழ் பாலம்...!
******
சாற்றினில் சேர்ப்பினும்
சோற்றினில் சேர்ப்பினும்
நாக்கினில் நீர்தருஞ்
சுவை வெல்லம்....!
******************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்