வாரண முகத்தோன் துணை

என் பணி புரியினும்
நின் திருப்பாதம் பணிந்து தொழுவேனே
அப்பணி சிறப்புடன் முடிவுறும்
அப்பனின் அருளோடு
இப்பிறவி விடை பெறவேணும்

பக்தியால் நானுன்னில்
பித்தனாய் அலைந்திட
நல்வழி காட்டி அருள்வாயே
கற்பக மரநிழலில் எப்போதும் நீயிருக்க
கற்ற உன் புகழை போற்றிப்பாடிட
நித்தமும் என்னுள் உறைவோனே
விரும்பிய தின்பண்டங்கள்
தித்திப்பாய் படைத்திட மனக்குறை தீர்ப்போனே
நிரம்பிய நீர் விழியுடனின்று
மெய்வருந்தி அழுதிட
மெய்சிலிர்க்க எழுந்தருளும் எம் பெருமானே

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (9-Jun-15, 4:14 pm)
பார்வை : 132

மேலே