வெயிலில் மழை
ஒரு பக்கம் இளம் வெயில் 
அடித்துக் கொண்டிருக்கும் போதே
பெய்கின்ற சிறு மழையில் 
கொஞ்சம் நனையலாம்.. 
என்னடா இது ..
ரெண்டுங்கெட்டானாய் ..
என்று ..
ஒதுங்கி ஓரமாய் 
நிற்கவும் செய்யலாம்..
மழை நிற்கும் வரை..!
இதெல்லாம் ..
அவரவர் விருப்பம்..
நனைந்தபடி 
நடப்பதும் 
ஒதுங்கி நிற்பதும் ..!
நடப்பவைகள் 
நமக்கு பிடிக்கவில்லை
என்றால்..
ஓரமாய் ஒதுங்கி 
நிற்பதில்லையா..என்ன?
மழையோடு சண்டை 
போடுவானா மனிதன்?
 
                    
