தலைவன் மனது

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழ கற்றது நன்று
தேடித் தேடி உழன்று
தேடும் பணம் கொண்டு
வாழும் வாழ்வில் சற்று
தொல்லைகள் தீரும் என்று
பிள்ளைக் காணா ஒன்று
பெற்றோர்,பாசம் ரெண்டு
பொறுப்புகள் தன்னில் நின்று
பாரம் தாங்கும் மனமோ மூன்று
வாடும் எந்தன் இதயம் இங்கு
வாசல் தேடும் உதயம் எங்கு
ஊசலாடும் பாசம் கொண்டு
உயிர்கள் தொடுக்கும் மாலை நன்று
பிழைப்பைத் தேடி வந்து
பொறுமை தாங்கிய மனது
தேடும் தாய்மண்ணை இன்று
தரிசிக்க தெய்வங்கள் அன்று
உருகிடும் உள்ளங்கள் கொண்டு
உணர்ச்சிகள் ஓடிடும் வெள்ளமென்று
நாட்களை நகர்த்த நின்று
கிழித்திடும் நாட்காட்டி என்று
அறிவித்திடும் தேதிகள் நீண்டு
கழித்திடும் பொழுதுகள் மாண்டு
வந்திடும் வேளைகள் என்று
கூத்தாடிடும் மனம் ஒன்று
உங்களை காண என்று
வாழுதே ஆவல் கொண்டு
அயல் நாட்டுப் பணி விடுமுறைக்காக
ஏங்கிடும் தலைவன் மனது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Jun-15, 8:18 pm)
Tanglish : thalaivan manathu
பார்வை : 80

மேலே