மனிதா புரிந்து கொள்

அனாதையாகப் பிறந்து பார்
பெற்றோரின் அன்பு புரியும்!

அடிமையாய் இருந்து பார்
விடுதலையின் அர்த்தம் புரியும்

உழைத்துப் பார்
வெற்றியின் உண்மை புரியும்

பசியாய் இருந்து பார்
உணவின் அருமை புரியும்

வெயிலில் நடந்து பார்
நிழலின் பெருமை புரியும்

ஒருமுறையாவது மனிதநேயத்துடன் வாழ்ந்து பார்
மனித பிறவியின் மகிமை புரியும் !!

எழுதியவர் : (9-Jun-15, 9:59 pm)
சேர்த்தது : பீமன்
பார்வை : 129

மேலே