அறிவியலின் வஞ்சனையில்
2 1/2 அடி உயரத்தில் இருந்து
விழுந்தால் உடையும் தொடுதிரைகள்
சற்றே சறுக்கினாலும் செலவு
வைக்கும் வாகன பாகங்கள்
அனாவசியமாக கால்களை
பேச வைக்கும் ரீசார்ஜுகள்
டேட்டாவின் மகத்துவம் சொல்லாத
உலகம் சுற்றும் பதிவுகள்
கிளிக்கின் அருமை சொல்லவே
முளைக்கும் வைரஸ்கள்
இதுவரை பசியையும்
பணியையும் பற்றி
உடைக்கவில்லை
நானெதுவும்
அறிவியலை வாழ்வியலாக்க
மூலதனங்களுக்கு முனைப்பில்லை
அரசியலை ஒதுக்கிவிட
நம் களிப்பில் உயிரில்லை
அறிவியல் நுழைந்த
அரசியல் தேடும்வரை
தொடங்காது நம் மீள்வு
அரசியலே நம் வாழ்வு