நீயும் நானும்

உன்னுடன் இருப்பது எனக்கு பழகிய ஒன்று.
உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளை
கோர்த்த போது,
எனக்கு கிடைத்தது என் வாழ்வின் சான்று!!!
உன்னை மொத்தமாய் நேசிக்கிறேன் ,
உன்னுள் உள்ள அழகை என்னுள் வாங்கும்பொழுது..
வாழ்வின் இரகசியத்தை பகிர்ந்துகொண்ட
நிமிடம், நித்தமாய் நிற்கிறது
என் நினைவில்!!
என்றும் உன்னுடன் இருக்க விரும்பும் என்னை , என்றும் கைவிடாதே நான் விரும்பும் “தனிமையே”....