வினாவின் பயணம் -மூர்த்தி
விடைதேடிப் புறப்படும் வினாவின் பயணம்
விடைபெற்றால் விடைபெறும் வினாவின் பயணம்
ஒன்றாய் இறந்து இரண்டாய்ப் பிறக்கும்
முடிவில்லாத் தேடல்தான் வினாவின் பயணம்
மாறும் மனங்களால் மாறும் விடைகளால்
மாறாத பயணம்தான் வினாவின் பயணம்
என்ன எப்படி எங்கே ஏணென்ற
நாற்சக்கர சாலையிலே வினாவின் பயணம்
நற்கருத்து கண்டபின்பும் நிற்காது தொடரும்..
-மூர்த்தி