அமானுஷ்ய ஒலி
கையைக் குவித்து
காது மடல் மூடி
கவிதை ஒன்று செய்ய
முற்பட்டதுண்டா நீங்கள்..?
ஊவென்று..
பாலைவனத்தில் வீசும்
காற்றின் ஓசை போல் ..
அமானுஷ்ய ஒலி ஒன்றினை ..
காதில் அப்போது கேட்டதுண்டா..?
கண்களையும் மூடி
சில நொடிகள் ..
அந்த ஒலியில்..
லயித்ததுண்டா..?
கண்களுக்குள் ..
நல்லவை ..கெட்டவை..
நடப்புகள்..நிகழ்வுகள்..
தெளிவாக தெரியும்
காட்சியைக் கண்டதுண்டா..?
ஆமாம்..என்றால்..
நீங்கள்
"கடவுளைக் கண்டேன்"..
என்ற தலைப்பில்
கவிதை எழுத முடியும் ..!
..
இல்லை என்றாலும்
நீங்கள்..
இப்படியெல்லாம்
சப்தம் கேட்டால்
"அதற்கு பெயர்
கடவுளா"..
என்றும் ஒரு
கவிதை எழுத முடியும் ..!
முதலில் சப்தம்
அப்படி வருகிறதா..
என்று பாருங்கள்..!
அதுவே இல்லையென்றால்..
முதலில் ..
மருத்துவரைப் போய்..
பார்த்து விடுங்கள்..!
..
கவிதை ..
எங்கே போய் விடப் போகிறது?