கை நீளம்
ஏகப்பட்ட டென்ஷன்னில் இருந்தார் புரோக்கர் கண்ணுசாமி.
இன்னும் சிறிது நேரத்தில் பெண் பார்க்க வரப் போகிறான் சேகர்.
இந்த தடவையாவது சேகரின் அம்மாவிற்கு பெண்ணை பிடிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருந்தார்.
இப்போது சேகர் பார்க்க போவது நான்காவது பெண். ஏற்கனவே பார்த்து விட்ட 3 பெண்களையும் அவன் அம்மா அந்த பெண்களுக்கு கை நீளம் என்று நிராகரித்துவிட்டார். அம்மா சரி என்றால் தான் மேலே பேசுவான் சேகர்.
கண்ணுசாமிக்கு அழுத்து போய் விட்டது.
எதை வைத்து பெண்களுக்கு கை நீளம் என்று திருட்டு பட்டம் சூட்டுகிறாள்? இந்த தடவை கேட்டு விட வேண்டும் என்று மனதில் உறுதியோடு இருந்தார்.
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது...
சேகரின் விருப்பத்தை கேட்டு விட்டு "என் மகன் கோயில் பூக்கடை வச்சுருக்கான். அவன் பூ போடா வேற கடைக்கு போகும் போது அவன கட்டிக்க போறவ தான் கடைய பார்த்துக்கணும். பூ கடைல நீளமான கையாள முழம் போட்டு விற்ற எங்களுக்கு தான் நஷ்டம். உங்க பொண்ணு கை சின்னது. அதான் எங்களுக்கு பிடிச்சிருக்கு" என்றார் சேகரின் அம்மா.
"அடடே.... இது தானா விஷயம்! என்று தலையை சொரிந்து கொண்டார் கண்ணுசாமி........