என்னவள்
காதல் மழை பொழியும் போது
கவிதை மயில் தோகை விரிக்கும்..
கவிதைமயில்
தோகைவிரித்தால்.!
கற்பனை வண்ணங்கள்
கண்ணில் தெரியும்
கற்பனை வண்ணங்கள்
கண்ணில் தெரிந்தால்.!
கைவிரல் வானவில்
வரையத்துடிக்கும்
கைவிரல் வானவில்
வரைந்து முடித்தால்.!
அது என்னவள்
முகமாக மாறியிருக்கும்....