வாழ்த்துக்கள்
அழைப்பு மணி
தொலைக்காட்சி
வானொலி
அழுத்தப்பாத்திரம்
இரைச்சல் தரும் எதுவும்
தொடங்கும் முன்
அதிகாலை
எழுந்துவிடுவது நலம்
அலார ஓசை
நாக்க மூக்கவாக
இல்லாமல் இளையராஜாவின்
இன்னிசையாய் இருந்தால்
மிக்க நலம்
சப்தத்தை தவிர்த்து
நிசப்தத்தை
துணையாய் கொண்டு
யாரையும் இம்சிக்காமல்
தாழ்ப்பாளை மெல்ல திறந்து
பூட்டிவிடுங்கள்
அகிலத்தை உள்ளங்கையில்
அடக்கும் அலைபேசியையும்
உங்கள் செவியையும்
அலைபேசியையும் இணைக்கும்
கேட்பொறியை வேண்டுமென்றே
மறந்து விடுங்கள்
சோடியம்
விளக்கில் ஊடுருவி
பனி படரும் இந்த
யாருமற்ற சாலை
உங்களைப் பரவசப்படுத்தும்
இலக்கேதுமில்லாமல்
மெதுவாய் நடந்திடுங்கள்
நெடுந்தூரம்
நடந்துவிட்ட நீங்கள்
தனிமையை தேடி
கண்களை மூடி
உயிர்வளியை
நிறைத்து கொஞ்சம்
ஆசுவாசபடுத்திகொள்ளுங்கள்
இந்த அற்புத தருணம்
உங்களுக்கே உங்களுக்கானது
செயற்கையாய் வரவழைக்கும்
புன்னகை இயற்கையாகவே
உங்கள் முகத்தில் தவழப்பட்டிருக்கும்
வீடு திரும்பி
உள் நுழைந்து
அமைதியாய் அமருங்கள்
இனி இன்று புதிதாய்
பிறந்த“நாளை”
புதிதாய் தொடங்கிட
எனது வாழ்த்துக்கள்.