தேவையில்லை

கோயில்கள் போதும் கடவுள் தேவையில்லை,
உயிர்கள் போதும் உணர்வுகள் தேவையில்லை,
காதலர்கள் போதும் காதல் தேவையில்லை,
ஆகமொத்தம் இந்த உலகிற்கு
இயந்திரம் போதும் இதயம் தேவையில்லை .
ஒருவேளை உனக்கு இதயமிருந்தால்
கழட்டிவைத்துவிட்டு இறங்கு
இந்த கழனிச்சாக்கடையில்...