வானிலாடும் பட்டம்

விட்ட பட்டம் வானிலே
***வெட்டி வெட்டித் தள்ளுது
வட்ட மிட்டுச் சுற்றுது
***வந்து கீழும் முட்டுது
கட்டு நூலும் போனது
***காற்று வீச ஆடுது
பட்டம் மீண்டும் கேட்டிடில்
***பட்டுக் கன்னம் வீங்குமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jun-15, 12:43 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 69

மேலே