நீ கவிதை
பார்க்க பிடிக்கும்
உன்னிடம் பேசுவதெனில்
அவ்வளவு பிடிக்கும் ......
எனது பல நரகங்களை
சொர்க்கங்கள் ஆக்கும் வித்தை
உனக்கு மட்டுமே தெரியும்.....
அழாமல் சிரிக்கும்
எனது பல சோகங்கள்
உனக்கு மட்டுமே புரியும்.....
உதிர்ந்த எனது கண்ணீர் துளிகளை
சேகரித்து மலர் செண்டாக்கி...
என்னிடம் நீட்டுவாய் ...
என்னை எனக்கே கையாள தெரியாமல்
சில்லு சில்லாய் உடைந்திருப்பேன்
நீயோ கலைடாஸ்கோப் செய்து
அழகு கூட்டுவாய் .....
உன்னுடைய குறைகளை எல்லாம்
என்னால் மட்டுமே
காதலாக்க முடியும்....
உன்னுடைய கறைகளை எல்லாம்
என்னால் மட்டுமே
ஓவியமாக்க முடியும்....
எனக்காக
தைக்கப்பட்ட காலணியில்
உன் கால்கள் மட்டுமே பொருந்தும் ....
உனக்காக
செய்யப்பட்ட ஆடியில்
நான் மட்டுமே தெரிவேன் ....
முடியாமல் பாதியில் நின்றாலும்
நீ....
என்....
கவிதை......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
